Header

Sri Lanka Army

Defender of the Nation

06th April 2020 19:45:33 Hours

எஸ்எல்சிஎம்பி சார்ஜனால் புதிய கிருமிநீக்கி அறை கண்டுபிடிப்பு

கோவிட்-19 வைரஸ் பரவூதலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த இராணுவ சார்ஜனால் தயாரிக்கப்பட்ட கிருமி நீக்கம் செய்யும் புதுமையான கண்டுபிடிப்பினை பயன்படுத்தி 5 ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் தலைமையகத்திற்கு வந்த அனைவருக்கும் கிருமி நீக்கம் செய்யும் வேளை ஆரம்பிக்கப்பட்டன.

சார்ஜன் கே.கே.எம். புஷ்ப குமார தனது சொந்த முயற்சியினூடாக கண்டுபிடித்த கிருமி நீக்கம் செய்யும் அறையை பயன்படுத்தி திங்கள்கிழமை (6) ஆம் திகதி முதல் நாரஹேன்பிட்டயில் உள்ள படையணி தலைமையக வளாகத்திற்குள் நுழையும் அனைவரையும் கொடிய வைரஸுக்கு எதிராக கிருமி நீக்கம் செய்யக்கூடியதாக உள்ளது.Running sport media | Air Jordan Release Dates 2020