Header

Sri Lanka Army

Defender of the Nation

06th April 2020 19:30:33 Hours

3 ஆவது கஜபா படையினரால் கிளிநொச்சி இரத்த வங்கிக்கு இரத்ததானம் வழங்கள்

அவசரநிலைகளுக்கான இரத்தத்திற்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியின் கோரிக்கையின் பேரில், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 57 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் இயங்கும் ,574 படைப்பிரிவின் 3ஆவது கஜபா படையினரால் வெள்ளிக்கிழமை (3)ஆம் திகதி மாங்குளத்தில் உள்ள பட்டாலியன் தலைமையக வளாகத்தில் இரத்த தானத் திட்டத்தைத் தொடங்கினர்.

கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 57 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பி.பி.எஸ்.சில்வா மற்றும் 574 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ஆகியோரின் மேற்பார்வையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ குழுவினரால் எந்தவொரு அவசர காலத்திலும் இரத்தத்தை பயன்படுத்தும் நோக்காக கொண்டு நடாத்தப்பட்ட இந்த இரத்த தான திட்டத்திற்கு, அதிகாரிகள் உட்பட 64 படையினர் தங்கள் இரத்தத்தை தானாக முன்வந்து கொடுத்தனர்.latest Nike Sneakers | jordan Release Dates