Header

Sri Lanka Army

Defender of the Nation

06th April 2020 18:50:12 Hours

இராணுவ இசை குழுவினரால் காண்பிக்கப்பட்ட மற்றுமொரு இன்னிசை நிகழ்வு

தற்போதுள்ள கோவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே தனிமைப்டுத்தி வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மன நிதானத்தை அளிக்கும் நோக்கமாக, இராணுவ இசை குழுவினர், ஞாயிற்றுக்கிழமை (5)ஆம் திகதி மாலை ராஜகிரிய ஐகோணிக் கட்டிடத்திற்கு அருகாமையில் ஒரு நடமாடும் இன்னிசை நிகழ்வினை நடத்தினர்.

கோவிட்-19 எதிரபாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவத் தளபதியுமன லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின் கீழ் இராணுவ இசை குழுவினர் தங்களுடய இன்னிசை திறமைகளை வெளிப்படுத்தினர்.அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரின் வழிகாட்டுதல்களின் கீழ் இன்னிசை நிகழ்வுகளானது முப்படையினர் மற்றும் பொலிசாரினால் நடாத்தப்பட்டு வருகின்றன.

பாடகர்களான பத்திய, சந்தோஷ் மற்றும் உமரியா சின்ஹவன்ச ஆகியோரும் இராணுவக் குழுவில் சேர்ந்து தங்களின் பிரபலமான திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த முக்கியமான நேரத்தில் அவர்களை மகிழ்விப்பதற்காக அங்கு இருந்த கலைஞர்களை நோக்கி நோக்கி பொதுமக்கள் தங்கள் பல்கனிகளில் இருந்து தேசியக் கொடிகளுடன் கைகளை அசைத்து கைதட்டினர். Sports brands | Nike Shoes