Header

Sri Lanka Army

Defender of the Nation

04th April 2020 19:40:17 Hours

முதியோர் இல்லத்திற்கு 58 ஆவது படைப் பிரிவால் உலருணவுகள் வழங்கி வைப்பு

தற்போது நாட்டில் நிலவும் அவசர ஊரடங்க சட்டத்தினை கருத்தில் கொண்டு இதற்கு உதவியளிக்கும் முகமாக புத்தளத்திலுள்ள 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கலா ஓயாவிலுள்ள ‘லூர்து மாதா” முதியோர் இல்லத்திற்கு இம் மாதம் (3) ஆம் திகதி உலருணவு பொருட்கள் மற்றும் உணவு பார்சல்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த முதியோர் இல்லத்திலுள்ள 22 பேருக்கு 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த உணவு வகைகள் வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். spy offers | UOMO, SCARPE