Header

Sri Lanka Army

Defender of the Nation

04th April 2020 14:50:56 Hours

இராணுவத்தினரால் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினருக்கு உதவிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் மாதம் (31) ஆம் திகதி துனுக்காய் மற்றும் உயிலங்குளம் கிராமசேவக பிரிவிற்குட்பட்ட பிர தேசத்தில் வாழும் வாழ்வாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 25 நபர்களுக்கு உலருணவு பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகள் வழங்கி வைக்கப்பட்டன.

கோவிட் – 19 தொற்று நோயை கட்டுபடுத்தும் முகமாக நாடாளாவியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் ஊரடங்கசட்டத்தினால் நாளாந்தம் தொழில்களை மேற்கொள்ளும் நபர்களது வாழ்க்கை நிலைமை தற்போது முடங்கி போயுள்ளமையால் அதனை கவனித்து படையினர் இந்த பணிகளை மேற்கொண்டனர்.

இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டீ.எம்.எச்.டீ பண்டார அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. bridge media | Nike - Shoes & Sportswear Clothing