Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd April 2020 23:40:19 Hours

சமூக ஊடக ஆர்வாலர்கள் தாங்கள் தயாரித்த விழிப்புணர்வு வீடியோவை யூடியூப்பில் முன்வைப்பு

சமூக ஊடக பிரச்சாரகாரர்கள் இன்று (2) ஆம் திகதி தேசிய பணிகளுக்கு தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகமாக, ஆயுதப்படைகள், பொலிஸார், மருத்துவர்கள், தாதிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள், சிறு பணியாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்படும் காட்சிகள் தயாரிக்கப்பட்ட யூ டியூப் வீடியோ ஆவணப்படத்தினை முன்வைத்தனர்.

கோவிட் -19 இன் ஆபத்தான பரவலைப் பற்றி பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் மற்றும் எச்சரிக்கை செய்யும் ஒரே நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் இந்த சமூக ஊடக ஆர்வாலர்கள், ராஜகிரியவிலுள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்புப் தலைமை பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்த பின்னர் யூ டியூப்பில் வீடியோ ஆவணப்படத்தினை முன்வைத்தனர்.

அஷான் ஒன்லைன், நாவா, எவர்-லவ்விங், ஜனாய்-பிரியய், வஸ்தி, ஸ்டுடியோ ரட்ட, விகடாம, டிராவல் வித் வைஃப், சூட்டி மல்லி மற்றும் போடி மல்லி உள்ளிட்ட பிரபல மற்றும் முன்னணி சமூக ஊடக ஆர்வாலர்கள் / பிரதிநிதிகள் குழுவினர் இராணுவ தளபதியை சந்தித்தனர். சில நாட்களுக்கு முன்பு, இந்த ஆர்வாலர்கள் இராணுவ செய்தித் தொடர்பாக இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்களை சந்தித்து வைரஸின் உடனடி ஆபத்து, சுகாதார நடைமுறைகளின் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் சவாலை ஏற்க தங்கள் தயார்நிலையை வெளிப்படுத்தினர். நமது நாட்டின் இந்த முக்கியமான நேரத்தில் தங்கள் ஊடகத்தின் மூலம் சுய தனிமைப்படுத்தல், சமூக விலகல் போன்றவற்றை முன்வைக்க முன்வந்துள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, அவர்கள் தேசிய உணர்வு மற்றும் சுவாரஸ்யமான தயாரிப்பை பாராட்டி, மிகவும் பயனுள்ள விளம்பர முறை என்பதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்த முக்கியமான தருணத்தில் ஒற்றுமையாக நிற்குமாறு அவர்களை வலியுறுத்தினார் ஒரு தேசத்தின் சகோதர சகோதரிகளாக இந்த உலகளாவிய அச்சுறுத்தலை வெல்லுங்கள். சுகாதார அமைச்சின் அதிகாரிகள், சுகாதார கல்வி மேம்பாட்டு பணியகத்தின் டொக்டர் அஷான் பதிரன மற்றும் மருத்துவ மாணவர்களின் நடவடிக்கைக் குழுவின் டொக்டர் கசுன் தாரக ஆகியோருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த தயாரிப்பிற்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆதரவு வழங்கியுள்ளது.

இந்த இணையத்தள விலாசத்தில் காணலாம், https://youtu.be/ZQBu3k1UcWU Nike Sneakers | Nike