Header

Sri Lanka Army

Defender of the Nation

31st March 2020 20:14:26 Hours

134 பேர் கொண்ட 7 ஆவது குழுவினர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து வீடு செல்லல்

பூனானை மற்றும் தியத்தலாவை ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இரண்டு வார கால தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 134 பேர் கொண்ட 7 ஆவது குழுவினர், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து இன்று காலை (30) அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

இராணுவத்தினால் வழங்கப்பட்ட போக்குவரத்து வசதிகளுடன் காலி,கொழும்பு,கண்டி மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களை நோக்கி புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர், வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து புறப்பட்ட அவர்களை வழியனுப்பி வைத்தனர்.trace affiliate link | Men’s shoes