Header

Sri Lanka Army

Defender of the Nation

28th March 2020 16:53:34 Hours

கோவிட்-19 இற்கு எதிராக கிளிநொச்சியில் கலந்துரையாடல்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் வியாழக்கிழமை (26) வெல்லங்குளம் பகுதியில் உள்ள 19 ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படை தலைமையகத்திற்கு தனது விஜயத்தின்போது,கோவிட் -19 தொற்றுநோயால் எற்படும் தற்போதைய அச்சுறுத்தல்கள், அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாப்புப் படையினரின் தயார்நிலை, அதனை அமுல்படுத்தும் திட்டங்கள் போன்றவற்றை முக்கிய சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இச்சந்திப்பில் 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி ,651 ஆவது பாதுகாப்பு படைத் கட்டளைத் தளபதி, புவனெக இலங்கை கடற் படை கட்டளை அதிகாரி, முலங்காவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக பதவி நிலை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.bridgemedia | Klær Nike