Header

Sri Lanka Army

Defender of the Nation

27th March 2020 22:00:58 Hours

கொழும்பு லயன்ஸ் கழகத்தினால் பனாகொடை இராணுவ வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

மாவட்ட 306 / சி லயன்ஸ் கழகம் மற்றும் கொழும்பு போர்ட் லயன்ஸ் கழகம் ஆகிய கழகங்களானது வைத்தியசாலை படுக்கைகள், மெத்தை, சக்கர நாற்காலிகள், நடைபயிற்சி உபகரணம், மருத்துவர்களின் நாற்காலிகள், இறுகபிடி, மருத்துவ உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் , முக கவசங்கள் போன்றவை நாட்டின் அவசர தேவை கருதி ஏதாவது தேவையேற்படுமிடத்து கோவிட்-19 நோயாளிகளின் பயன்பாட்டிற்காக வெள்ளிக்கிழமை (27) இராணுவ வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்தனர்.

மாவட்ட 306 / சி/01 லயன்ஸ் கழக தலைவர் மஹிந்த பெரேரா மற்றும் கொழும்பு போர்ட் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் ரூபா 2.5 மில்லியன் பெறுமதியான இருப்புக்களை மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களிடம் பனாகொடை மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வைத்து கையளித்தனர்.

அதற்கு மேலதிகமாக அதே நன்கொடையாளர்கள் உளர் உணவுப் பொதிகளை குறித்த பிரதேசத்திலுள்ள வரிய குடும்பங்களுக்கு வழங்குவதற்காக அவர்களிடம் கையளித்தனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரியினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் கலந்துகொண்டனர். Best Nike Sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK