Header

Sri Lanka Army

Defender of the Nation

27th March 2020 17:28:52 Hours

படையினர், அனைத்து மருத்துவ மற்றும் சுகாதார ஊளியர்களின் அர்ப்பணிப்பு தொடர்பாக சுகாதார அமைச்சர் & சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விளக்கமளித்தல்

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று (26) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மருத்துவ நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க, ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

இன்று பிற்பகல் (26) மாலை 4.45 மணியளவில் வரையான கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் ஒரு கோவிட் -19 வைரஸ் தொற்று நோயாளர் கூட கண்டறியப்படவில்லை என்பதை சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னி ஆராச்சி தெரிவித்தார், மேலும் இந்த நிலை அடுத்த இரண்டு நாட்களில் நீடிக்க வேண்டும் 14 நாள் தனிமைப்படுத்தல் காலம் அடுத்த வார தொடக்கத்தில் அதன் உச்சக்கட்டத்தை எட்டும்." கோவிட் -19 வைரஸ் நோயில் இருந்து குணமடைந்த இன்னும் நான்கு பேர் இன்று காலை தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டனர், அவர்கள் சில காலம் தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் நாட்டின் நலனுக்காக இராணுவத் தளபதி மற்றும் இராணுவத்திற்கு அவர்கள் வழங்கிய பிரதான அர்கணிப்பிற்காகதேசமானது நன்றி செலுத்துகிறது. அதேபோல், தங்கள் சொந்த உயிர்களுக்கு எதிராக பெரும் ஆபத்துகள் இருந்தபோதிலும், தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லும் 'சுவ செரிய' ஆம்புலன்ஸ் சேவையை,வழங்குபவர்கள் எங்கள் சிறப்பு மரியாதை மற்றும் பாராட்டுக்கு தகுதியானவர்கள் "பாதிக்கப்பட்ட நபர்கள் படிப்படியாக வெளியேற்றுவதில் நாம் அனைவரும் திருப்தி அடைய முடியும், மேலும் நமது தேசத்தின் இந்த முக்கியமான நேரத்தில் அவர்களின் மருத்துவ பங்களிப்புக்காக அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் பாரா மருத்துவர்களுக்கும் பாராட்டப்படக்கூடியவர்கள்" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கண்டகாடு, தியதலாவை, மீயாங்குளம் மற்றும் பூனானை ஆகிய இடங்களில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இரண்டு வார கால தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 223 நபர்களைக் கொண்ட ஒரு குழுவினர் இன்று (26) இராணுவத்தினரால் வழங்கிய போக்குவரத்து வசதிகளுடன் வீடு திரும்பினர். அவர்களில் நான்கு பேர் தென் கொரியர்கள் மற்றும் ஈரானியர்கள் ஆவர். "இன்றுவரை, மொத்தம் 678 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். தற்போது, 27 வெளிநாட்டினர் உட்பட, 2866 நபர்கள் குறித்த 46 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் உள்ளனர். அதேபோல், காண்டகாடு மற்றும் தியதலாவை தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் உள்ள அனேகமானோர் நாளை (27) வீட்டிற்கு புறப்பட உள்ளனர், ”என்று கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஊடகங்களுக்குத் கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த கொடிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளுக்கு இராணுவம் அளிக்கும் உதவி மிகவும் பாராட்டத்தக்கது என்று மருத்துவ நிபுணர், சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.அதேவேளை, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் போது போர்வீரர்களுக்கு அவர்கள் எவ்வாற்று மரியாதை செலுத்தினார்களோ அவ்வாறே அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் மிக உயர்ந்த மரியாதை செலுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 22 வைரஸ் தொற்று நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 வைரஸ் தொற்று நோயாளர்களும் மற்றும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 10 வைரஸ் தொற்று நோயாளர்களும் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்குமேலதிகமாக புத்தளம் மாவட்டத்தில் இருந்து 9 வைரஸ் தொற்று நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளன. வீட்டகளில் உள்ள நோயாளிகளுக்கு அவர்களின் மருத்துவ பதிவுகள் மற்றும் மருந்து சிட்டுகளின் பிரகாரம் பரிந்துரைக்கப்பட்ட மருந்து பாக்கெட்டுகள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என டொக்டர் ஜாசிங்க மேலும் கூறினார். Mysneakers | Releases Nike Shoes