Header

Sri Lanka Army

Defender of the Nation

25th March 2020 18:30:14 Hours

இரண்டாவது குழு வீடு செல்ல தயார் நிலையில் என லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் (NOCPCO) வழக்கமான ஊடக சந்திப்பு இன்று (24) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மருத்துவ நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் (பொது சுகாதார சேவைகள்) பிரதி பணிப்பாளர் டொக்டர் பாபா பாலிஹவதன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

"இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து 108 பேர் கண்டக்காடு மற்றும் புனானியிலிருந்து 203 பேர் இன்று (24) ஆம் திகதிமொத்தமாக 311 பேர், 11 பேருந்துகளில் மாத்தறை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர். இவர்களுடையபொருட்களை 6 லொரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டன. இதேபோல், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து கோவிட்-19 வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட அந்த 17 நபர்கள், மைலேடியில் சிறப்பாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல்மையங்களில் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேள 47 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில், 31 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 3224 நபர்கள் உள்ளனர் "என கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் கூறியதாவது: "இதேபோல், கண்டகாடு மற்றும் பூனானை தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் உள்ள 208 பேர் கொண்ட இரண்டாவது குழு நாளை (25) தங்கள் வீடுகளுக்கு புறப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாவது குழுக்கான அனைத்து போக்குவரத்து வசதிகளும் இராணுவத்தால் வழங்கப்படும்."

இந்த தொற்றுநோய் இலங்கையில் வேகமாகப் பரவாததால், பொது மக்கள் முகமூடி அணியத் தேவையில்லை என்று சுகாதார சேவைகள் (பொது சுகாதார சேவைகள்) பிரதி பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் டொக்டர் பாபா பாலிஹவதன குறிப்பாக சுட்டிக்காட்டினார். தற்போது அந்த முகமூடிகளை பயன்படுத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

"ஏதேனும் ஒரு நிகழ்வு ஏற்பட்டால் மட்டுமே முகமூடிகளை அணிய வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். முகமூடியை அணிவதற்கான நுட்பங்கள், அதன் சரியான பயன்பாடு மற்றும் அதை அகற்றுதல் ஆகியவை கவனமாக துல்லியமாக செய்யப்பட வேண்டும், மேலும் ஒரு சாதாரண நபர் அதைப் பயன்படுத்துவது கடினம் முகமூடியைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சில நேரங்களில் COVID-19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் "என்று டொக்டர் பாலிஹவதன எச்சரித்தார்.

மேலும் 4 வைரஸ் தொற்று நோயாளர்கள் இன்று பதிவாகியுள்ளதாக மருத்துவ நிபுணர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க அவர்கள் தெரிவித்தார், இத்தாலியைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் அமெரிக்காவிலிருந்து மற்றொரு நபர். "இலங்கையில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று நோயளர்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிக எச்சரிக்கை மாவட்டங்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது, ஏனெனில் இதுவரை கண்டறியப்பட்ட 102 தொற்று நோயளர்களில் பெரும்பாலானவை அந்த மாவட்டங்களான கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 10 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேரும், கலுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதா இல்லையா என்பதை விட , அந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் நோய் மேலும் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது அவசியம், "என்று டொக்டர் ஜாசிங்க பொதுமக்களை வலியுறுத்தினார்.

(காணொளியை பார்க்க அழுத்துக) latest Nike Sneakers | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1