Header

Sri Lanka Army

Defender of the Nation

24th March 2020 09:53:21 Hours

நாட்டிற்குள் நுழைந்தவர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று கோவிட்-19 தேசிய செயல்பாட்டு நிலையம் வேண்டுகோள்

கோவிட்-19 வைரஸ் தொற்றில் இலங்கையில் மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது என்று (20) ஆம் திகதி மாலை பாதுகாப்பு தலைமை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இடம் பெற்ற கோவிட்-19 விசேட ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2738 பேர் இப்போது 17 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அவர்களில் 30 பேர் வெளிநாட்டவர்களாவர்.

மேலும் இந்தியாவில் யாத்திரை மேற்கொண்டு சிறிலங்கா எயர் லைன்ஸ் யுஎல் 122 விமானத்தின் ஊடாக சென்னை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த 97 விமான பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதற்கமைய கோவிட்-19 வைரஸ் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு நிலையமானது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்படுத்தாமல் வெளியேறிய அனைத்து இலங்கைக்குள் வந்தடைந்த நபர்களும் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தப்பட்ட செயல்பாட்டின் கீழ் தங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றது என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

அதற்கமைய இன்று (20)ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் (23) ஆம் திகதி திங்கட் கிழமை காலை 6.00 மணி வரை நாடு முழுவதும் அரசாங்கத்தால் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் ஊரடங்கு சட்டத்தின் போது தங்களது சம்பந்தப்பட்ட தேவைகளை மேற்கொள்ள தங்களது அடையாள அட்டைகளைக் காண்பித்து தங்களது பணியிடங்களுக்கு செல்லலாம். Sports News | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat