Header

Sri Lanka Army

Defender of the Nation

13th March 2020 15:02:33 Hours

‘Jaffna Got Talent’ இறுதிச் சுற்றுப் போட்டிக்கு போட்டியாளர்கள் தேர்ந்தெடுப்பு

யாழில் இடம்பெறவிருக்கும் 2020 ஆம் ஆண்டிற்கான ‘Jaffna Got Talent’ இறுதிச் சுற்றுப் போட்டிக்கு போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வானது இம் மாதம் (10) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜனைரல் ருவன் வனிகசூரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

இறுதிச் சுற்றுப் போட்டிக்காக பாடகர்கள் மற்றும் நடன துறையைச் சேர்ந்த 20 போட்டியாளர்கள் பங்கேற்றிக் கொண்டனர். இவர்கள் விஷேட நடுவர்களின் தீர்ப்புக்கு மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் 51,52 மற்றும் 55 ஆவது படைப் பிரிவின் தளபதிகள், கட்டளை தளபதிகள், இராணுவ உயரதிகாரிகள், பார்வையாளர்கள் பங்கேற்றிக் கொண்டனர். அத்துடன் இறுதிச் சுற்றுக்களின்போது அகற்றப்பட்ட 10 போட்டியாளர்களுக்கு இந்த நிகழ்வின் ஊடாக சான்றிதழகள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். Sports Shoes | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival