Header

Sri Lanka Army

Defender of the Nation

13th March 2020 15:02:35 Hours

இலங்கை இராணுவ சிங்க படையணியில் ஆரம்பிக்கப்பட்ட மெக்ஸ்சிஸ் 'துரு வியன' மர நடுகை திட்டம்

நாட்டின் மர வளர்ப்பை மேம்படுத்தி அழகுபடுத்தலுக்கான நிமித்தம் இலங்கை இராணுவ சிங்க படையணியானது ‘மனுசாத் தெரன” மரம் நடும் நிழ்ச்சி திட்டத்தின் கீழ் மெக்ஸ்சிஸ் மெகா ‘துரு வியன’ மர நடுகை திட்டமானது 10 ஆம் திகதி காலை ஆரம்பித்துள்ளன.

இந்த நிகழ்வில் மூத்த சினிமா நடிகர் திரு.ரவீந்திர ராண்தெனிய அவர்களுடன்இ மேஜர் ஜெனரல் மனோஜ் முடன்னாயக்க, இலங்கை இராணுவ இராணுவ காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும், இலங்கை இராணுவ சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் மனோஜ் முத்தன்னாயக ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவ சிங்க படையணி பட்டாலியன் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி மேஜர் சமீர தசாநாயக்க அவர்கள் இந் நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்தினார். இந்த நிகழ்வின் அழைப்பை ஏற்று வருகை தந்த திரு. ரவீந்திர ராண்தேனிய அவர்கள் ஒழுக்கம் மற்றும் ஒத்திசைவான பணிகள் தொடர்பாக பார்வையாளர்கள் மத்தியில் உரையாற்றினார்

இந்த நிகழ்வில் பசுமை சூழலின் முக்கியத்துவத்தை தொடர்பு படுத்தி டயர் ஹவுஸ் குழு நிர்வாக பணிப்பாளர் திரு சுனில் பொன்சேகா அவர்களும் உரையாற்றினார்.

பின்னர், இலங்கை இராணுவ சிங்க படையணியின் வளாகத்திற்குள் அதிகமான 'அனோதா', துரியன், 'விளா மரம் 'மா, தென்னை ஆகிய 100 க்கும் அதிகமான மரங்களை நட்டுவைத்தனர். இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ சிங்க படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி பியுமாலி முத்தனாயக, இராணுவ சிங்க படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் அஜித் பல்லேவல, இராணுவ சிங்க படையணியின் சேவா வனிதா பிரிவின் செயலாளர் பத்மினி பல்லேவல, ‘மனுசத் தெரன’ உறுப்பினர்கள், மேக்சிஸ் டயர் குழுவின் உறுப்பினர்கள், இலங்கை இராணுவ சிங்க படையணியின் படையினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டன.

மரங்கள் மற்றும் வேளாண் வனவியல் அமைப்புகளை நடவு செய்வதற்கான அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் நட்பு பசுமைத் திட்டக் கருத்தாக்கத்துடன் ஒத்துழைக்கும் முகமாக இலங்கை இராணுவ சிங்க படையணியின் படைத் தளபதியவர்களின் மேற்பார்வையின் கீழ் இலங்கை இராணுவ சிங்க படையணியானது 1500 மரக்கன்றுகள் வரை இத் திட்டத்தை விரிவுபடுத்த எதிர்பார்க்கிறதுBest jordan Sneakers | Nike, adidas, Converse & More