Header

Sri Lanka Army

Defender of the Nation

13th March 2020 11:02:32 Hours

சர்வதேச இராணுவ விளையாட்டு 2020 இல் ‘சமையல் கலை’ போட்டியில் ரஷ்ய இராணுவத்தினர் பங்கேற்பு

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சின் தூதுக்குழுவினர்கள் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியும் மற்றும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் ஆசீர்வாதத்துடன் 2020 ஆம் ஆண்டு இடம்பெற இருக்கும் சர்வதேச இராணுவ விளையாட்டு 2020 இன் ‘சமையற்கலை’ போட்டியில் பங்கேற்க தற்போது இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

2019 ஆம் ஆண்டில் இதே போல் இடம்பெற்ற சமையற்கலை போட்டியில் ரஷ்யாவின் ரஷ்ய கூட்டமைப்பின் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான போட்டியாளர்களுடன் போட்டியிட்டனர். இதில் ஆறு இலங்கை இராணுவ வீரர்களால் அவர்களின் பன்முக சமையல் நிபுணத்துவத்தை பயன்படுத்தி பல தொழில்முறை திறன்களை வெளிப்படுத்தினர்.

ஏழு ரஷ்ய இராணுவத்தினரால் தற்போது ரஷ்யன் குழுவினரின் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளின் படி வெவ்வேறு இடங்களை உள்ளடக்கிய சனிக்கிழமை (14) வரை சமையற்கலை’ போட்டி இடம் பெறவுள்ளது.

ரஷ்ய இராணுவ குழுவினர் தங்கியிருந்த காலத்தில் இலங்கையின் இருப்பிடங்கள், வளங்கள் மற்றும் மூலப்பொருட்களின் கிடைக்கும் தன்மை, உணவு வகைகளின் தரம்,சமையல் தயாரித்தல், பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களின் பயன்பாடு, சுகாதார ஊட்டச்சத்து போன்றவைகளை மேற்கொள்ளவுள்ளன. இலங்கையை அரங்காகத் தேர்வுசெய்தால், பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களை போட்டிக்கு அழைக்க ரஷ்ய இராணுவம் எதிர்பார்க்கின்றது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் பிரகாரம் தற்போதைய இவர்களின் சுற்றுப்பயணத்தை இராணுவ பயிற்சி பணியகம் மற்றும் இராணுவ வினியோக மற்றும் போக்குவரத்து பணியகத்தினரால் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளன. trace affiliate link | Sneakers