Header

Sri Lanka Army

Defender of the Nation

10th March 2020 08:10:08 Hours

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற கச்சத்தீவு விழா

புனித அந்தேனியர் தேவாலயத்தினூடாக ஆன்மீக திருப்பிதை அடைந்து கொள்வதன் நிமித்தம் இந்திய பக்தர்கள் மற்றும் பெருமளவான இலங்கையர்கள் கலந்து கொண்ட வருடாந்த கச்சத்தீவு விழாவிற்கு யாழ் பாதுகாப்பு படையினர் தங்களது ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர்.

இந்த வருடாந்த நிகழ்வானது சிங்கள,தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடாத்தப்பட்டன. காலி மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்ரமசிங்க, இந்திய சிவகங்கை விகார் ஜெனரல் ஜோசப் லோர்து ராஜா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞாணப்பிரகாசம் அவர்களின் தலைமையில் பெருமளவான பக்தர்கள், இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் இலங்கை கடற்படை ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சனிக்கிழமை 7 ஆம் திகதி இந்நிகழ்வானது இடம்பெற்றது.

இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிசாரின் ஒத்துழைப்புடன் இலங்கை கடற்படையானது இந்நிகழ்விற்கான அனைத்து வசதிகளையும் வழங்கியுள்ளது. Running sport media | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092