Header

Sri Lanka Army

Defender of the Nation

08th March 2020 14:45:16 Hours

61 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதி நியமனம்

பூஸாவில் அமைந்திருக்கும் 61ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் கே.எச்.பி.பி பெணாண்டோ அவர்கள் இம் மாதம் 4 ஆம் திகதி புதன் கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இப் புதிய படைத் தளபதிக்கு படைத் தலைமையக வளாகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி நுலைவாயிற் வரவேற்பு மரியாதையும் மரியாதை அணிவகுப்பும் வழங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்த மத அனுஸ்டானங்களின் பின்னர் உத்தியோகபூர்வமாக தனது ஆவனத்தில் கையொப்பமிட்டு கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர், பதவியியேற்பினை நினைவு படுத்தும் முகமாக தலைமையக வளாகத்தினுள் மா மரக்கன்றையும் நட்டுவைத்தார். பின்னர் தலைமையகத்திலுள்ள படையினர் மத்தியில் கடமை பொறுப்புகள் தொடர்பாக உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் 61 ஆவது படைப் பிரிவின் கீழ் பணியாற்றும் படைப் தலைமையகங்களின் கட்டளை தளபதிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்துகொண்டனர், short url link | Men’s shoes