Header

Sri Lanka Army

Defender of the Nation

08th March 2020 15:00:16 Hours

கிளிநொச்சி நிர்வாக அதிகாரிகள் சங்கத்தை நிறுவுவதற்கான ஒழுங்குகள் ஏற்பாடு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 57 மற்றும் 571 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நிர்வாக அதிகாரிகள் சங்கத்தை நிறுவுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளும் வகையில் கிளிநொச்சியில் பணியாற்றும் அரச நிர்வாக அதிகாரிகளுக்கிடையில் தொடர்பு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஒன்றுகூடல் கூட்டமானது இம் மாதம் (5) ஆம் திகதி 57 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த ஒன்றுகூடலில் பிரதேச செயலகம், பிராந்திய கல்வி வலயம், நீர்ப்பாசன திணைக்களம், விவசாய திணைக்களம், சுகாதார அலுவலகம் மற்றும் இப்பிரதேசத்திலுள்ள வங்கிகளை சேர்ந்த 36 அதிகாரிகளின் பங்கேற்றுக் கொண்டனர்.

இதன் போது இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.பி.எஸ் டி சில்வா அவர்கள் இந்த அதிகாரிகளுக்கு முன்னிலையில் சிறப்பான உரைகளை பரிந்துரைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports Shoes | Nike News