Header

Sri Lanka Army

Defender of the Nation

08th March 2020 15:20:16 Hours

கிழக்கில் உள்ள 1000 மேற்பட்ட இராணுவத்தினரால் கரையோர சுத்தப் பேணலிற்கான சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 22ஆவது 23ஆவது மற்றும் 24ஆவது படைத் தலைமையகங்களின் சுமார் 1000 இராணுவப் படையினரிள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அரச அதிகாரிகள் போன்றோரின் ஒருங்கிணைப்போடு பாரிய அளவிலான கரையோர சுத்தப்படுத்தலிற்கான சிரமதானப் பணிகள் வெள்ளிக் கிழமை (06) திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பெட்ரிக் கோட்டை ஓர்சில் கோணேஸ்வரம் மற்றும் மனியாவெலி போன்ற கடலோர பிரதேசங்களிலும் அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காயங்கேணி காத்தான்குடி மற்றும் கல்லடி போன்ற கரையோரப் பிரதேசங்களிலும் மேலும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொத்துவில் மற்றும் அருகம்பே போன்ற கரையோரப் பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ரசிக்க பெணான்டோ அவர்களின் வழிகாட்டலின் கீழ் மிக மோசமான நிலையில் மாசடைந்து காணப்படுகி;ன்ற இக் கரையோர பிரதேசங்களை சுத்திகரிக்கும் நோக்கில் இச் சிரமதானப் பணிகள்; முன்னெடுக்கப்பட்;டுள்ளன. இதன் போது இராணுவம் மற்றும் மாநகர சபை போன்றவற்றின் ஒத்துழைப்போடு இப் பணிகளுக்காக வழங்கப்பட்ட டிரக்கடர் வண்டிகளின் மூலம் இதன் போது மாசடைந்து காணப்படும் குப்பைக் கூலங்கள் அகற்றப்பட்டன.

இக் கரையோர சுத்தம் பேணல் சிரமதானப் பணிக்கு படைப் பிரிவுகளின் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் போன்றோர் தத்தமது பிரதேசங்களை சுத்தப்படுத்தலிற்கான ஒருங்கிணைப்பை வழங்கினர்.Nike Sneakers Store | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf