Header

Sri Lanka Army

Defender of the Nation

10th March 2020 12:10:08 Hours

படையணிகளுக்கு இடையிலான வலைபந்து சம்பியன்ஷிப் இறுதி போட்டிகள்

படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற வலைபந்து சம்பியன்ஷிப் இறுதி போட்டியின் கின்னங்கள் மற்றும் சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வானது பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் 06 ஆம் திகதி வௌளிக்கிழமை இடம் பெற்றது. இந்த நிகழ்விற்கு பாதுகாப்பு தலைமை பிரதாணியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சிவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையின் 3 அணிகள், இலங்கை இராணுவ சமிக்ஞை பயைடயணியின் 1 அணி மற்றும் இலங்கை இராணுவ இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் 1 அணி உட்பட 6 வலைப்பந்து அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் குழுவும் போட்டியிட்டது.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதியை இராணுவ வலைப்பந்து சங்கத்தின் தலைவரும், இலங்கை இராணுவ மகளிர் படையணியின் மத்திய படைத் தளபதியுமான பிரிகேடியர் ஆர்.எம்.பி.டி ரத்னாயக அவர்களால் வரவேற்கப்பட்டதுடன், இராணுவப் பாடல் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிர் நீத்த போர் வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுதப்பட்டதுடன், வரவேற்பு உரையும் நிகழ்த்தப்பட்டது.

இறுதிப் போட்டிகள் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் ‘A’ அணிக்கும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் ‘B’ அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இறு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் ‘A’ அணி வெற்றி பெற்றது. இந் நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதி அவர்களால் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு சம்பியன்ஷிப் வெற்றி கிண்ணங்களையும் விருதுகளையும் வழங்கினார்.

அன்றைய நிகழ்வின் இறுதியில் நன்றி உரையும் நிகழ்த்தப்பட்டது.

இந்த போட்டி நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன, போர்க்கருவி பணிப்பாளர்அ நாயகம் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர, உபகரண மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் எம்ஏ.ஏ.டி சிறிநாக உட்பட பலர் கலந்துகொண்டு பார்வையிட்டனர். bridge media | AIR MAX PLUS