Header

Sri Lanka Army

Defender of the Nation

06th March 2020 13:54:00 Hours

கொமாண்டோ படையணியின் ‘கொமாண்டோ பூட்ஸ்லொக்’ நடைபவனி

கொமாண்டோ படையணியின் 40 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக கண்டி,சிலாபம் மற்றும் காலி ஆகிய இடங்களில் இருந்து 5 ஆம் திகதி வியாழக்கிழமை கொமாண்டோ படையணியினர் தங்களது நடைபவனியை ‘கொமாண்டோ பூட்ஸ்லொக்’ ஆரம்பித்துள்ளனர்.

இந்த நடைபவனியானது திறன், விடாமுயற்சியினை வெளிப்படுத்தும் வகையில் கொமாண்டோ படையினர் தங்களது மெரூன் தொப்பியணிந்து (7)ஆம் திகதி கணேமுல்லையில் அமைந்துள்ள கொமாண்டோ படையணி தலைமையகத்திற்கு வந்தபின் மூன்று நடை பவனியும் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலி முகத்திடலில் முடிவடையும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

ஸ்ரீ தலதா மாலிகையில் இடம்பெற்ற மத அனுஸ்டானங்களுக்கு பின்னர், கண்டியில் 1 ஆவது கொமாண்டோ படையினர் 5 ஆம் திகதி வியாழக்கிழமை ‘கொமாண்டோ பூட்ஸ்லொக்’ நடை பவனியை ஆரம்பித்து கேகாலை வரை வந்தடைந்தனர். மறுநாள் 6 ஆம் திகதி பசியாலயை வந்தடைந்தனர். தொடர்ந்து சுமார் 100 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய, கடுகண்ணாவ, மாவனெல்ல, அம்பேபுஸ்ஸ, நிட்டம்புவ, பசியால, யக்கல மற்றும் கடவத்தை வழியாக அவர்களின் நடை பவனி சனிக்கிழமை (7) ஆம் திகதி கொமாண்டோ தலைமையகத்தில் முடிவடையும். கொமாண்டோ படையணியின் பிரிகேட் கொமாண்டர் பிரிகேடியர் ஷானக ரத்நாயக்க அவர்கள் கண்டியில் வைத்து இந்த நடை பவனி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதில் 1 ஆவது கொமாண்டோ படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் நந்தன அபயகோன் அவர்களும் கலந்துகொண்டார்.

இதேபோல், 2ஆவது கொமாண்டோ படையினர் வியாழக்கிழமை 5 ஆம் திகதி சிலாபத்தில் இருந்து கணேமுல்லை வரையான நடை பவனியை சிலாபத்தில் உள்ள தேவகிரி ரஜ மகா விகாரையில் மத அனுஸ்டானங்களுக்கு பின்னர் ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து சுமார் 80 கி.மீ தூரத்தை கொண்ட இந்த நடை பவனியானது மாரவில, வெண்ணப்புவ, நீர்கொழும்பு, கட்டுநாயக்க, சீதுவ, ஜா-எல, வெலிசர, ராகம மற்றும் வெலிபில்லாவா வழியாக கணேமுல்லவை சனிக்கிழமை (7) ஆம் திகதி வந்தடையும். இந்த நடை பயணத்தை 58 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் பிரதி படைத் தளபதி பிரிகேடியர் உபாலி ராஜபக்ஷ அவர்கள் கொமாண்டோ கொடியேற்றி சிலாபத்தில் வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். 2ஆவது கொமாண்டோ படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் உபுல் பிலாப்பிட்டிய அவர்களும் கலந்து கொண்டார்.

அதேபோல், 4ஆவது கொமாண்டோ படையினர் வியாழக்கிழமை (5) ஆம் திகதி காலை 7.30 மணிக்கு காலி மத்திய பேருந்து நிலையம் அருகே தங்கள் நடை பவனியை ஆரம்பித்து, ஹிக்கடுவ, அஹுங்கல்ல, அலுத்கம,பேருவல மற்றும் கலுத்துறை, பானந்துறை, பம்பலபிட்டி, கொழும்பு கோட்டை மற்றும் கணேமுல்ல வந்தடைந்தனர். இவ் நடை பவனியின் தூரமானது 149 கி.மீ. ஆகும். கணேமுல்ல கொமாண்டோ படையணி தலைமையகத்தின் பிரதி படைத் தளபதி கேணல் பிரியங்கர உபேசிரிவர்தன மற்றும் 4 ஆவது கொமாண்டோ படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சமான் பெரேரா அவர்கள் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.

மேலும் ‘கொமாண்டோ பூட்ஸ்லொக்’ நடை பவனியானது ஞாயிற்றுக்கிழமை (8) ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் பம்பலப்பிட்டியில் ஒன்று கூடும் நீண்ட அணிவகுப்புக்குப்புக்கு பின்னர் காலிமுகத் திடலில் நிறைவடைகிறது. சேர்கோண்டோக்களின் ஸ்கைடிவிங் திறன்கள், பேஸ் ஜம்பிங், நாய்களின் விளையாட்டுக்கள், டவர் ராப்பெல்லிங், வான்வழி ஸ்டண்ட்ஸ், விஐபி பாதுகாப்பு, கொமாண்டோ உண்மையான சண்டை பயிற்சி உள்ளடங்களாக பல நிகழ்வுகள் (8) ஆம் திகதி மாலை அரங்கேற்றப்படும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும். ஞாயிற்றுக்கிழமை (8) ஆம் திகதி மாலை காலி முகத்திடலில் இடம்பெறும் இந்த நடைப் பவனியில் இணையுமாறு கொமாண்டோ படையினர் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றனர் short url link | adidas Yeezy Boost 700 , Ietp