Header

Sri Lanka Army

Defender of the Nation

06th March 2020 12:54:00 Hours

சிரேஷ்ட இந்திய இராணுவ அதிகாரிகள் வரவேற்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையத்திற்கு வியாழக் கிழமை 5 ஆம் திகதி வருகையை மேற்கொண்ட சிரேஷ்ட இந்திய இராணுவ அதிகாரிகளை இராணுவ பயிற்றுவிப்பு மற்றும் கட்டளை தளபதியும் இராணுவ பொது நிர்வாக பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் சுராஜ் பங்சஜயா அவர்களுக்கு பதிலாக மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்கள் வரவேற்றார்.

பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பிரகாரம் இந்திய இராணுவத்தை சேர்ந்த பிரிகேடியர் அருன் குமார் பரட்வாஜ் மற்றும் கேணல் முதித் மஹாஜன் ஆகியோர் இராணுவ கோட்பாட்டு ஆவணங்கள் மற்றும் சூத்திரம் தொடர்பாக ஒத்துழைப்பு வழங்க இங்கு வருகை தந்தனர்.

மேஜர் ஜெனரல் வடுகே சிரேஷ்ட மற்றும் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில் இருதரப்பு விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன. இச் சந்திப்பின் இறுதியில் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு ஞாபக சின்னத்தினை வழங்கி வைத்தார். Best Nike Sneakers | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat