Header

Sri Lanka Army

Defender of the Nation

04th March 2020 15:25:30 Hours

141 ஆவது பாதுகாப்பு படை கட்டளைத் தளபதியின் பதவியேற்பு நிகழ்வு

141 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக கஜபா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் எல்.கே.பி.சி விஜேதுங்க அவர்கள் தனது கடமையை வெயாங்கெடையிலுள்ள படைத் தலைமையகத்தில் வைத்து புதன் கிழமை 4 ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளைத் தளபதியவர்கள் உத்தியோகபூர்வமாக கையொப்பத்தினைட்டு தனது கடமையை மஹா சங்கதேரர்களின் பௌத்த மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் அவர் மா மரக்கன்றினை படைத் தலைமையக வளாகத்தினுல் நட்டதோடு படையினர் மத்தியில் உரையாற்றினார். அங்கு வருகை தந்ந கட்டளைத் தளபதியவர்களுக்கு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வில் கட்டளை அதிகாரிகள், பிரதேச கட்டளைத் தளபதிகள், பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். trace affiliate link | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify