Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd March 2020 17:00:43 Hours

வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 62, 621 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நிகவெவ பிரதேசத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு 50 தண்ணீர் பில்டர் தாங்கிகள் மற்றும் டீசேட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நன்கொடைகள் 621 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ஏ.பி விக்ரமசேகர அவர்களது தலைமையில் கொழும்பு ரொட்டரிக் கழகத்தின் அனுசரனையில் வழங்கி வைக்கப்பட்டன.

வெலிஓயவிலுள்ள எதாவெடுனவேவ சமூக நலன்புரி மண்டபத்தில் இந்த நன்கொடை வழங்கி வைக்கும் நிகழ்வானது இம் மாதம் (1) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கொழும்பு ரொட்டரி கழகத்தின் தலைவர் கயான் சமரவீர, வெலிஓய பகுதியைச் சேர்ந்த புதிய மின்னணு கண்டுபிடிப்புகளில் விஞ்ஞானி மற்றும் ரொட்டரி கழகத்தின் உறுப்பினரான டொக்டர் அநுர ரத்னாயக, 621 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ஏ.பி விக்ரமசேகர, 14 ஆவது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest jordans | Nike nike dunk high supreme polka dot background , Gov