Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd March 2020 12:53:34 Hours

துரு மித்துரு – நவ ரடக் மர நடுகை திட்டத்தின் 3 ஆவது கட்ட நிகழ்வு

புதிய இராணுவத் தலைமையகத்திற்கு அருகாமையில், சுற்றுப்புறங்களைப் பொதுமக்களுக்காக அழகு படுத்தி பசுமையாக்குவதன் நிமித்தம், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது மேற்பார்வையின் கீழ் இராணுவத்தினரால் ‘துரு மிதுரு நவ ரடக் ‘எனும் திட்டத்தின் 3 ஆவது கட்ட மர நடுகையானது இன்று 03 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வானது இராணுவ தலைமையகத்தின் உபகரண மாஸ்டர் ஜெனரல் கிளையின் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்களின் தலைமையில் 06.30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்து இராணுவ தலைமையக நுழைவாயிலுக்கு அருகே மரக்கன்றுகனை நட்டு வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டனர்.

'துரு மித்துரு - நவ ரடக்' திட்டத்தின் வரைபடத்தின் பிரதான காட்சி பலகை, பொதுமக்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட 2 கி.மீ நீள நடைபாதை, உடல் பயிற்சிக்கான 3 புதிய பகுதிகள் மற்றும் இராணுவத்தால் புதுப்பிக்கப்பட்ட வீதியோர ஏரியை அழகுபடுத்துதல் ஆகியன இத் திட்டத்தின் முதல் கட்டமாக பிரதம அதிதியவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

இராணுவ தளபதி புதிதாக மீள்நிர்மானம் செய்யப்பட்ட ஏரியில் 10,000 மீன் குஞ்சுகளை இட்டார். அதே சந்தர்ப்பத்தில் மேலும் 10,000 மீன் குஞ்சுகள் விசேட பாதுகாப்பு படைகளின் இரண்டு படகுகளைப் பயன்படுத்தி தூய நீர் ஏரியில் விடப்பட்டன.செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியை சுற்றியுள்ள மண் மேட்டினில் 100 தென்னங்கன்றுகள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நடப்பட்டன. வீதியோரத்திலும், ஏரியருகிலும் அமைக்கப்பட்ட 24 கொங்கிரீட் இருக்கைகளை அன்றைய பிரதம அதிதியவர்கள் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

அன்றைய நிகழ்வின் இறுதி கட்டமாக , லெப்டினன்ட் ஜெனரல் சில்வா, இராணுவத் தலைமையகத்தின் புதிய காட்சி பலகையின் இருபுறமும் இரண்டு ‘எஹெல’ மரக்கன்றுகளை நட்டார். பின்னர், புதிய இராணுவத் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 130 மிமீ கவச வாகனம் மற்றும் 122 மிமீ பீரங்கிக் குண்டு தாங்கி வண்டிகளை திறந்து வைத்தார்.

அரசாங்கத்தின் சுற்றுப்புற சூழல் மற்றும் பசுமைத் கருத்திட்டம் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவில் , நாட்டின் மரவளர்ப்பு, தேசிய அழகுபடுத்தல், நகர்ப்புற மரவளர்ப்பு, பசுமையான பாதைகள்,மற்றும் வேளாண்மை போன்ற விடயங்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் 'துரு மிதுரு நவ ரடக்’ எனும் தொணிப் பொருளிலான மெகா மர நடுகைத் திட்டத்தின் முதலாம் கட்ட நிகழ்வானது 2019 டிசம்பர் 23 திகதி பத்தரமுல்லையில் ஆரம்பமானது.. இதில் 170 அரலிய மரக்கன்றுகளானது பத்தரமுல்லையில் உள்ள டென்சில் கோபேகடுவ வீதியின் ஊடாக ஸ்ரீ ஜெயவர்தனபுர இராணுவ தலைமையகம் வரை இருபுறத்திலும் நடப்பட்டன.

அதிமேதகு ஜனாதிபதியின் ‘சௌபாக்கிய தெக்ம’ எனும் தொணிப்பொருளின் கீழ் நடுகைத் திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவத் தளபதியவர்களின் எண்ணக்கருவிலான ‘துரு மித்துரு நவ ரட்டக்’ மர நடுகையின் இரண்டாவது கட்ட நிகழ்வானது இலங்கை இராணுவத்தினால் 2020 ஜனவரி 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஶ்ரீ ஜயவர்தனபுரையில் அமைந்துள்ள இராணுவத் தலைமையக வளாகத்திற்கு சொந்தமான 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட வயல் நிலங்களில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் வேளான்மை திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டன. அதேநாள் கரந்த, மீ, மற்றும் கோபோ நீலா போன்ற 140 மரகன்றுகளானது வீதியினூடாக புதிய இராணுவத் தலைமையகம் வரையிலான வீதியோரங்களில் (1.7கி.மீ) நடப்பட்டன. jordan Sneakers | Jordan Ανδρικά • Summer SALE έως -50%