Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd March 2020 19:06:44 Hours

இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தினுள் புதிய கட்டிட தொகுதிகள் இராணுவ தளபதியினால் திறந்து வைப்பு

இலங்கை இராணுவத்தில் பழைமை வாய்ந்த படையணியுமான இலேசாயுத காலாட் படையணி தலைமையகம் பனாகொடையில் அமைந்துள்ளது. இந்த தலைமையக வளாகத்தினுள் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிட தொகுதிகள் இம் மாதம் (2) ஆம் திகதி பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியும், இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது அழைப்பையேற்று இந்த நிகழ்விற்கு இராணுவ தளபதியவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து சிறப்பித்தார்.

தலைமையக வளாகத்தினுள் படையினர்களுக்கான உணவு விடுதி, தங்குமிட விடுதிகள், சிற்றூண்டிச்சாலை, கேட்போர்கூடம் மண்டப கட்டிட தொகுதிகள் இந்த நிகழ்வினூடாக திறந்நு வைக்கப்பட்டன.

இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியை இப்படையணியின் மத்திய கட்டளை தளபதி கேர்ணல் அநுர திசாநாயக அவர்கள் வரவேற்று பின்னர் படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி வர்ணகொடியுடன் அணிவகுப்பு கெரவ மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.

அத்துடன் இலேசாயுத காலாட் படையணிக்குரிய ‘கந்தல’ யானையானது இராணுவ தளபதியை கௌரவித்து ஆசிர்வாத மரியாதையும் வழங்கியது.

பின்னர் இராணுவ தளபதியவர்கள் தலைமையகத்தினுள் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிட தொகுதிகள் பௌத்த சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு இராணுவ தளபதி அவர்களினால் ரிபன் வெட்டி திறந்து வைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து தலைமையகத்திலுள்ள 1200 படையினர்கள் மத்தியில் இராணுவ தளபதி அவர்கள் உரையை நிகழ்த்தினார்.

இந்த உரையின் போது இராணுவ தளபதி அவர்கள் இலேசாயுத காலாட் படையணியானது 138 ஆண்டு பூர்த்திகளை நிறைவு செய்த பலமை வாய்ந்த படையணியாகும். இந்த படையணியானது விளையாட்டு துறைகளில் சம்பியன்ஷிப், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்கள், வெள்ளி பதக்கங்களை பெற்று கௌரவ நாமத்துடன் முன்னனியாக திகழ்கின்றது என்று வலியுறுத்தினார்.

இராணுவ தளபதியாகிய நான் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இலேசாயுத காலாட் படையணியினர் வலிமை மற்றும் தைரியத்துடன் செயல்பட்டு தன்னலமற்ற பங்களிப்பை வழங்கினார்கள் என்பதை இத்தருணத்தில் கூற விரும்புகின்றேன். .

“சமீபத்தில், வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகத்தின் ஏற்பாட்டில் நெல் நிலங்களை மீண்டும் பயிரிடுவதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் இலங்கை இராணுவத் தலைமையக வளாகத்தின் கீழ் உள்ள 12 நிலப்பரப்புக்களில் வேளாண்மை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை இராணுவத்தின் கௌரவ நாமத்தை வெளிப்படுத்தும் முகமாக இராணுவ தலைமையக நுழைவாயிலில் கௌச, பீரங்கி வாகனங்கள் காட்சிக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினால் ‘துரு மிதுரு – நவ ரடக்’ எனும் தொணிப்பொருளின் கீழ் மரநடுகைத் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டு ‘ மாசுபாட்டிலிருந்து விடுபட்டு அரசாங்கத்தின் பசுமை சூழல் உருவாக்கும் நோக்குடன் இந்த மரநடுகைத் திட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் கொழும்பு மாநகரத்தினுள் போக்குவரத்து நெருசல்களை குறைப்பதற்காகவும், இலங்கை பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக போக்குவரத்து பணிகளில் இராணுவ பொலிஸாரை ஈடுபடுத்தி இராணுவத்தின் நற்பெயரை நாட்டினுள் வலுவடையச் செய்துள்ளோம்.

"இராணுவத்தால் செயல்படுத்தப்பட்ட சமூக மற்றும் நலன்புரித்திட்டங்கள் அவற்றின் கடமைக்கு அப்பாற்பட்டவை, ஆனால் சமாதானத்தை நிலைநாட்டவும், இறுதியில் கலவரங்கள், வெளிநாட்டு தலையீடுகள் அல்லது வேறு எந்த அச்சுறுத்தல்களிலிருந்தும் தாய்நாட்டைப் பாதுகாப்பது எமது கடமையும் பொறுப்பும் ஆகும் என்று இராணுவ தளபதி கருத்து தெரிவித்தார்.

"இலங்கை இராணுவத்தின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை இராணுவத்தினுள் 244 அதிகாரிகள் மற்றும் 7643 படை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது, அந்த பதவி உயர்வானது இராணுவத்தினுள் பல ஆண்டுகளாக தாமதமாகி இருந்து வந்தது. இராணுவ வரலாற்றில் இவ்வளவு பெரிய சதவீத பதவி உயர்வு வழங்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். ”என்று இராணுவ தளபதி இந்த உரையினூடாக நினைவுபடுத்தி தனது உரையை நிறைவு செய்தார். அதன் பின்பு இராணுவ தளபதியவர்கள் தலைமையகத்தில் அதிகாரி மற்றும் படையினர்களுடன் குழுப்புகைப்படத்தில் இணைந்து கொண்டு தலைமையகத்திலுள்ள விஷேட அதிதிகளுக்கான குறிப்பேட்டிலும் கையொப்பமிட்டார்.

இறுதியில் இராணுவ தளபதியின் வருகையை கௌரவிக்கும் முகமாக இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி அவர்களினால் இராணுவ தளபதி அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்று பரிசாக வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மூத்த உயரதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best Running shoes | Nike