Header

Sri Lanka Army

Defender of the Nation

27th February 2020 16:35:28 Hours

57 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் நிறைவு ஆண்டு தின நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் 13 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வானது புதன்கிழமை 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனைத் முன்னிட்டு சனிக்கிழமை 22 ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள புனித தெரேசா தேவாலயத்தில் மத வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் 57 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பி.பி.எஸ் டி சில்வா அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வை முன்னிட்டு 24 ஆம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி கந்தசாமி கோவில் மற்றும் கிளிநொச்சி சலாம் ஜூம்மா பள்ளிவாசல் ஆகிய இடங்களில் மத வழிப்பாடுகள் இடம்பெற்றன.

அத்துடன் 25 ஆம் திகதி மாலை பௌத்த மத குருவான காகம சிரினநந்த தேரர் அவர்களினால் ‘பன’ நிகழ்வு நடாத்தப்பட்டது. இதில் 600க்கும் அதிகமான படையினர் பங்குபற்றினர்.

மேலும் 26 ஆம் திகதி 9 ஆவது விஜயபாகு கலாட் படையணியின் படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி படைத் தளபதிக்கு நுழைவாயில் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டன. இதனையடுத்து வருகை தந்த பிரதம அதிதி அவர்கள் இராணுவ அதிகாரிகள் மற்றும் பதவி நிலை அதிகாரிகளுடன் குழு புகைப்படத்திலும் கலந்து கொண்டார். மேலும் படையினர் மத்தியில் உரையாற்றிய அவர் அதே தினத்தில் ஆணைப்பெராத அதிகாரிகள் உணவக அறையில் ஏற்பாடுசெய்யப்பட்ட மதிய விருந்திலும் கலந்கொண்டார்.

இறுதியாக 57 ஆவது படைப் பிரிவின் அனைத்து படையினர்களும் மாலை இன்னிசை நிகழ்வில் கலந்து கொண்டனர். Nike sneakers | New Releases Nike