Header

Sri Lanka Army

Defender of the Nation

29th February 2020 14:46:01 Hours

புதிய பொறிமுறை காலாட் படையணி தளபதிவர்கள் படையணிகளுக்கான விஜயம்

பொறிமுறை காலாட் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.ஜி.டி.என் ஜயசுந்தர அவர்கள், 2ஆவது பொறிமுறை காலாட் படையணி தலைமையகம் மற்றும் பொறிமுறை காலாட் படையணி பயிற்சி நிலையம் ஆகிய இடங்களுக்கான விஜயத்தினை வியாழக் கிழமை 27 ஆம் திகதி மேற்கொண்டார்.

விஜயத்தினை மேற்கொண்ட பொறிமுறை காலாட் படையணியின் தளபதியவர்கள், 2 ஆவது பொறிமுறை காலாட் படையணி பட்டாலியனின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பி.ஐ. புஞ்சிஹேவா அவர்களினால் வரவேற்கப்பட்டார். அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

பொறிமுறை காலாட் படையணியின் மத்திய கட்டளைத் தளபதி பிரிகேடியர் எஸ்.ஜே பிரியதர்சன , பொறிமுறை காலாட் பிரிகேட் படையணியின் பரிபாலன தளபதி படையணியின் பதவி நிலை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர் விஜயத்தினை மேற்கொண்ட இரண்டு இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

பொறிமுறை காலாட் படையணி பயிற்சி நிலையத்தின் மத்திய கட்டளைத் தளபதி கேணல் பி.பி.ஜி.கே பாலசூரிய அவர்களினால் புதிய பொறிமுறை காலாட் படையணி தளபதியவர்கள் வரவேற்கப்பட்டார்.

பின்னர் அவர் விஜயத்தினை மரக்கன்றினை நட்டுவைத்த்துடன் குழு புகைப்படத்திலும் கலந்துகொண்டார்.அனைத் தொடர்ந்து அவர் மத்திய கட்டளைத் தளபதியவர்களினால் படையணியின்செயற்பாடுகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டார். அதன் பின்னர் புதிய தளபதியவர்கள் புதிய கேட்போர்கூடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டதோடு முகாம் வளாகத்தினையும் பார்வையிட்டார். துப்பாக்கி சூட்டு வீச்சுதொடர்பான செயல் விளகமளிக்கப்பட்ட அவர் படையினர் மத்தியில் உரையாற்றினார்.

அனைத்து படையினர்களுக்கும் மத்தியில் உரையாற்றியதுடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார். அதன் பின்னர் தனது விஜயத்தின் இறுதியாக அதிகாரிகள் உணவு அறையில் இடம்பெற்ற மதிய விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.

இறுதியாக ,பொறிமுறை காலாட் படையணி பயிற்சி நிலையத்தின் மத்திய கட்டளைத் தளபதியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய விருந்துபசாரத்தில் விஜயத்தினை மேற்கொண்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் அதிதிகள் புத்தகத்தில் தனது குறிப்பை இட்டார். Best Nike Sneakers | 『アディダス』に分類された記事一覧