27th February 2020 15:30:28 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவிற்குட்பட்ட 511,515, மற்றும் 513 படைப் பாதுகாப்பு படை பிரிவுகளுக்கு இம் மாதம் 22 ஆம் திகதி தனது விஜயத்தை மேற்கொண்டார்.
முதலாவதாக, 511ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட யாழ் தளபதி அவர்களுக்கு, 511 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளைத் தளபதி படையினர்களின் கடமை பொறுப்புகள் தொடர்பாக விரிவான விளக்கத்தை வழங்கினார். மேலும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் 511 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் மற்றும் பதவி நிலை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்கள் 515 மற்றும் 513ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார். அங்கு வருகை தந்த யாழ் தளபதியை 515 மற்றும் 513 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தளபதிகள் வரவேற்றனர். அதன் பின்னர் பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளைத் தளபதிகள் படையினர்களின் கடமை பொறுப்புகள் தொடர்பாக விரிவான விளக்கத்தை வழங்கினர். மேலும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் படையினர் மத்தியில் உரையாற்றினார். jordan release date | nike