Header

Sri Lanka Army

Defender of the Nation

27th February 2020 15:45:28 Hours

புதிய பொறிமுறை காலாட் படையணி தளபதி 3ஆவது பொறிமுறை காலாட் படையணிக்கு விஜயம்

பொறிமுறை காலாட் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.ஜி.டி.என் ஜயசுந்தர அவர்கள், 3ஆவது பொறிமுறை காலாட் படையணிக்கான தனது முதலாவது விஜயத்தினை புதன் கிழமை 26 ஆம் திகதி மேற்கொண்டார்.

விஜயத்தினை மேற்கொண்ட பொறிமுறை காலாட் படையணியின் தளபதியவர்கள், பொறிமுறை காலாட் படையணி பட்டாலியனின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி.எம்.எம் திசாநாயக்க அவர்களினால் வரவேற்கப்பட்டார். அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

பொறிமுறை காலாட் படையணியின் மத்திய கட்டளைத் தளபதி கேணல் கே.கே.எஸ் பெராகும், கட்டளை அதிகாரி கேணல் ஏ.எச்.ஏ.டி ஆரியசேன, இராணுவ பயிற்சி பாடசாலை பயிற்சிபெறுனர் , படையணியின் பதவி நிலை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர் காலாட் படையணி பட்டாலிய வளாகத்தில் மரக்கன்றினை நட்டுவைத்தார். பின்னர் அனைத்து படையினர்களுக்கும் மத்தியில் உரையாற்றியதுடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார். அதன் பின்னர் குழு புகைப்படத்திலும் கலந்துகொண்டார். தனது விஜயத்தின் போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொலைக்காட்சி அறை மற்றும் 100 x 20 பரப்பளவு கொண்ட கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இறுதியாக அதிகாரிகள் உணவு அறையில் இடம்பெற்ற மதிய விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார். Sports brands | Nike Shoes