Header

Sri Lanka Army

Defender of the Nation

27th February 2020 16:30:28 Hours

59 ஆவது படைப் பிரிவு படைத் தளபதியின் பதவி உயர்வை முன்னிட்டு வரவேற்பு நிகழ்வு

59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபில்யூ.எல்.பி. டபில்யூ பெரோ அவர்களின் பதவி உயர்வை கௌரவிக்கும் நிமித்தம், 25 ஆம் திகதி நந்திக்கடல் பிரதேசத்தில் அமைந்திருக்கும் 59 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் நுழை வாயலில் வைத்து இராணுவ சம்பிரதாய முறைப்படி படையினரால் வரவேற்பு மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படைத் தலைமையக வளாகத்தில் மா மரக்கன்று நட்டுவைத்தார் பின்னர் அனைத்து படையினர்களுக்கும் மத்தியில் உரையாற்றினார். இதில் கட்டளைத் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட அவர் அனைத்து படையினர்களிடம் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் 591,593 படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து அதிகாரிகள் உட்பட படையினர் பலரும் கலந்துகொண்டனர். affiliate link trace | Air Jordan 1 Retro High OG University Blue - Gov