Header

Sri Lanka Army

Defender of the Nation

28th February 2020 08:00:33 Hours

கடற்படை ஜூனியர் பாடநெறியினை தொடரும் படையினர் பொறிமுறை காலாட் படையணிக்கு விஜயம்

கடற்படை ஜூனியர் பாடநெறியி இல – 26 பாடநெறியினை தொடருகின்ற பங்களதேசத்தை சேர்ந்த ஒரு கடற்படை அதிகாரி உட்பட 05 பயிற்றுவிப்பாளர் 23 பயிலுனர் அதிகாரிகள் உள்ளடக்கிய குழுவினர் இம் மாதம் (26) ஆம் திகதி புதன் கிழமை பொறிமுறை காலாட் படையணியிக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

இப் படையணிக்கு வருகை தந்த இவர்களை பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி மத்திய கட்டளை தளபதி லெப்டினன்ட் கேணல் எச்.கே.எஸ்.திலகரத்னே படையணியின் பதவி நிலை அதிகாரி 1 (விணியோக) ஆகியோர் இணைந்து வரவேற்றனர்.

அதன் பின்னர், பொறிமுறை காலாட் படையணியின் பொறுப்புகள் தொடர்பாக முறையான விளக்கமளிப்பு இடம்பெற்றதுடன் பின்னர் பொறிமுறை காலாட் படையணியின் உபகரணங்கள் குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டன.

அதன்பிறகு, இந்த குழுவினர்கள் அதிகாரிகளின் இல்லத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியாக இவர்களுக்கிடையில் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொள்ளப்பட்டன. அத்துடன் இந்த விஜயத்தின் நினைவாக குழு புகைப்படமும் எடுக்கப்பட்டது. Asics footwear | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ