Header

Sri Lanka Army

Defender of the Nation

29th February 2020 17:46:01 Hours

இராணுவ சேவா வனிதா பிரிவு மற்றும் இராணுவ தளபதியின் நிதி அனுசரனையுடன் நிகழ்ந்த புலமைப்பரிசு நிகழ்வு

இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சுஜீவா நெல்ஷன் அவர்களது தலைமையில் விஷேட தேவையுடைய உயிர் நீத்த படையினர் மற்றும் இராணுவ விரர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசு நலன்புரித்திட்டத்தின் கீழ் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் ஐந்தாம் ஆண்டு, க.பொ.த சாதாரன மற்றும் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது இம் மாதம் (26) ஆம் திகதி கொழும்பு இரண்டில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கல்லூரியில் இம் மாதம் (26) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சுஜீவா செல்ஷன் அவர்களது அழைப்பையேற்று பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்திரானி குணரத்ன அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்தார். அத்துடன் சிறப்பு விருந்தினராக பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வந்த பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சித்திரானி குணரத்ன அவர்களை பாடசாலை மாணவன் மற்றும் மாணவிகள் வரவேற்று பின்னர் கலாச்சார நடன குழுவினரால் வரவேற்று கேட்போர்கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

புலமைப்பரிசு விருது வழங்கும் விழாவின் க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் பெறுபேறுகளை பெற்றுள்ள மாணவர்களின் உயர் படிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன். க.பொ.த உயர்தர 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் சித்தியடைந்த 106 பேர்களுக்கான புலமைப்பரிசில்கள் மற்றும் அனைத்து படையணிகளிலிருந்து 56 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 1500/= ரூபாய் புலமைப்பரிசு தொகை நிதி வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் ஐந்தாம் தரம் புலமைப் பரிட்சைகளில் 179 புள்ளிகளை பெற்றுக் கொண்ட 45 மாணவர்களுக்கு 15.000/= ரூபாய் நிதியமும், க.பொ.த சாதாரன பரிட்சைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 33 பேருக்கு 20,000 ரூபாய் நிதியமும், க.பொ.த உயர்தர பரீட்சைகளின் மூலம் பல்கலைக்கழகத்திற்கு தேர்வான 28 மாணவர்களுக்கு 25.000/= ரூபாய் நிதியாக வழங்கி வைக்கப்பட்டன.

சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்ஷன் அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். நன்கொடையாளிகளாக திருமதி ஶ்ரீராணி மற்றும் திரு ஆனந்தகொட அவர்களது நிதி அனுசரனையில் மூன்று புலமைப்பரிசு திட்டங்கள் மாதாந்தம் 1500/= ரூபாய் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் யூனியன் பிளேஸ் மக்கள் வங்கி மற்றும் டொக்டர் ஆனந்த குமாரசிறி அவர்களது நிதி அனுசரனையுடன் பாடசாலை உபகரணங்கள் மாணவர்களுக்கு இந்த நிகழ்வுகளின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி மற்றும் இராணுவ தளபதி அவர்களினால் புலமைப்பரிசில்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த நிகழ்வுகளின் ஊடாக மேடையில் வைத்து புலமைப்பரிசுகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்த நிகழ்வில் இராணுவ படையணியின் அனைத்து படையணிகளிலுமுள்ள இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவிகள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், மாணவர்களது குடும்பத்தார், பெற்றோர்கள் இணைந்து கொண்டனர்.

நிகழ்வில் இறுதி அங்கமாக நன்றியுறைகள் கூறி தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. Nike footwear | Women's Sneakers