27th February 2020 12:10:48 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் 10ஆவது புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்கள்; தமது கடமைப் பொறுப்பை பனாகொடையில் உள்ள சமிக்ஞைப் படையணித் தலைமையகத்தில் புதன் கிழமை (26) பொறுப்பேற்றார்.
தற்பொழுது மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்கள்; சபுகஸ்தந்தையில் உள்ள பாதுகாப்பு சேவைக் கட்டளை மற்றும் பதவிநிலைக் கல்லூரியின் கட்டளைத் தளபதியாக சேவையாற்றுவதுடன் சமிக்ஞைப் படையணிக்கு வந்த புதிய தளபதியவர்கள் மத்திய கட்டளைத் தளபதியினால் வரவேற்கப்பட்டார். அதன்பின்னர் சமிக்ஞைப் படையணிப் படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்கள் இப் படைத் தலைமையகத்தில் உள்ள நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் மங்கள விளக்கேற்றி மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக தமது கடமைப் பொறுப்பை ஏற்றதுடன் மஹா சங்கத்தினரின் ஆசிர்வாதத்தினையும் பெற்றுக் கொண்டார்.
அதிகாரிகள் மற்றும் படையினர் மத்தியில் உரையாற்றியதனைத் தொடர்ந்து அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர் மதிய உணவு விருந்துபசாரங்களிலும் கலந்து கொண்டார்.
சில தினங்களுக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்ற மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டிஆராச்சி அவர்களுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate tracking url | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ