Header

Sri Lanka Army

Defender of the Nation

27th February 2020 14:20:48 Hours

இராணுவ பொலிஸ் படைத் தலைமையகத்தின் புதிய படைத் தளபதி தனது கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வு

கொழும்பு 5 பொல்ஹென்கொடையில் அமைந்துள்ள இராணுவ பொலிஸ் படையணியின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர் பிரேமலால் அவர்கள் இம் மாதம் 26 ஆம் திகதி புதன்கிழமை படைத் தலைமையக அலுவலகத்தில் வைத்து தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணு மரியதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டது.

புதிதாக நியமிக்கப்பட்ட இப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர் பிரேமலால் அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்டு இராணுவ பொலிஸ் படையினரால் நுழைவாயில் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் அலுவலகத்தின் உத்தியோக பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு புதிய நியமனத்தின் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன் பின்னர், தேநீர் விருந்துபசாரத்துடன் முடிவடைந்த இந்நிகழ்ச்சியில் ரெஜிமென்டல் கவுன்சிலின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர் பிரேமலால் அவர்கள் வட மத்திய முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதியாகவும் சேவையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. spy offers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092