24th February 2020 23:00:01 Hours
சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 54 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மதவாச்சி கொக்கட்டியாவஹொலவா பிரதேசத்தில் வசிக்கும் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தாருக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் உலருணவுகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த உதவிகள் மதவாச்சி விமல் தேரரது அனுசரனையுடன் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.எஸ்.டி வெலிகல அவர்களது வழிக்காட்டலின் கீழ் 542 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் இப்பிரதேசத்தில் வசிக்கும் 42 குடும்பத்தினருக்கு உலருணவு பொருட்களும், பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 14 மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.affiliate tracking url | Women's Nike Superrep