Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2020 02:45:01 Hours

கொமாண்டோ படையணியின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கப்ருக் பூஜை நிகழ்வுகள்

கொமாண்டோ படையணியின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் சில்வா அவர்களின் வழிக்காட்டலின் கீழ் , அனுராதபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸுவர்ணமாலி தூபியில் ஏற்பாடு செய்யப்பட்ட கப்ருக் பூஜை நிகழ்வுகள் இம் மாதம் 20 ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றன. இந்நிகழ்வில் உயிர் நீத்த படை வீரர்களின் குடும்ப அங்கத்தவர்கள் பங்குபற்றினர்.

இந்த பூஜை நிகழ்வில், 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன, கொமாண்டோ பிரிகேட் தலைமையக தளபதி பிரிகேடியர் சானக ரத்னாயக, கொமாண்டோ படையணியின் மத்திய கட்டளை தளபதி கேணல் ஷாமல் சில்வா, படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், படையினர்கள்,பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். Nike shoes | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals