25th February 2020 20:00:26 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூ அவர்களுக்கு பனாகொடையிலுள்ள தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
இராணுவ தலைமையகத்தில் திட்டமிடல் பணிப்பாளராக பதவி வகிக்கும் இவர் தலைமையகத்திற்கு வருகை தந்ததும் படையினரால் முன் வைக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதைகளை பெற்றுக் கொண்டு தலைமையகத்தினுள் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபி வளாகத்திற்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீர ர்களை நினைவு படுத்தி அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் இந்த மூத்த அதிகாரியினால் தலைமையகத்திலுள்ள ‘கண்டுல’ யானைக்கு பழங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த மூத்த உயரதிகாரி படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தி சாஜன் விடுதியில் ஒழுங்கு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்விலும் இணைந்து கொண்டார். latest jordans | Footwear