Header

Sri Lanka Army

Defender of the Nation

26th February 2020 09:58:48 Hours

சிங்கப் படையணி தலைமையகத்தில் பதவியுயர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு கௌரவ மரியாதைகள்

இலங்கை சிங்கப் படையணியில் புதிதாக மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்ட மூத்த அதிகாரிகளுக்கு இம் மாதம் (24) ஆம் திகதி அம்பேபுஸ்ஸவிலுள்ள சிங்கப்படையணி தலைமையகத்தில் கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

சிங்கப் படையணிக்குரிய மூத்த அதிகாரிகளான மேஜர் ஜெனரல் டி.எம்.எச்,டி பண்டார, மேஜர் ஜெனரல் ஏ.ஏ.ஐ.ஜே பண்டார, மேஜர் ஜெனரல் டி.எஸ்.டி வெலிகல, மேஜர் ஜெனரல் எச்.எம்.பீ.ஆர்.டி ஹத்னாஹொட போன்றோர் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் இவர்களுக்கு சிங்கப் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

தலைமையகத்திற்கு வருகை தந்த இந்த மூத்த அதிகாரிகளை சிங்கப் படையணியின் படைத் தளபதியை பிரதிநிதித்துவபடுத்தி சிங்கப் படையணியின் மத்திய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அஜித் பல்லாவல மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் துலித் பெரேரா அவர்கள் வரவேற்றனர்.

பின்னர் இந்த மூத்த அதிகாரிகளுக்கு சிங்கப் படையணியைச் சேர்ந்த படையினரினால் அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த அதிகாரிகள் தலைமையக வளாகத்தினுள் உள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தி அஞ்சலிகளை செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து இந்த மூத்த அதிகாரிகளை கௌரவிக்கும் முகமாக தேநீர் விருந்துபசார நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீர ர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்துடன் அன்று பகல் தலைமையக அதிகாரி விடுதியில் சிங்கப் படையணியின் படைத் தளபதியும் காலாட் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்நாயக அவர்களது பங்களிப்புடன் இந்த மூத்த அதிகாரிகளுக்கு பகல் விருந்தோம்பல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. Nike air jordan Sneakers | nike air max 95 obsidian university blue book list