25th February 2020 00:50:01 Hours
68 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கால்பந்தாட்டப் போட்டிகள் இரணபாலை புனித அந்தோனியார் விளையாட்டு மைதானத்தில் 27 சிவில் கால்பந்தாட்ட கழகங்களில் நூற்றிற்கு மேலான கால்பந்தாட்ட போட்டியாளர்களை உள்ளடக்கி ஞாயிற்றுக் கிழமை (23) ஆம் திகதி இடம் பெற்றது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கால்பந்தாட்ட போட்டியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் இளைஞர்களின் விளயைாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டன. இப் போட்டியானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் முல்லைத்தீவு நந்திக்கடல் பிரதேசத்தில் உள்ள 68 ஆவது படைப் பிரிவின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர் எம் பி ஜே ரத்நாயக்க பாரிய அளவிலான பொது மக்கள் கால்ப்பந்தாட்ட போட்டியாளர்கள் மற்றும் இராணுவத்தினர் பலர் கலந்து கொண்டனர். இப் போட்டியானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. jordan Sneakers | FASHION NEWS