Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2020 15:58:51 Hours

சாம்பிய இராணுவத் தளபதியவர்கள் விமானப் படைத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்ட சாம்பிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் டபிள்யூ.எம் சிகாஸ்வே பிஎஸ்சி டீஐபி (டீஎஸ்எஸ்) எம்ஏ (டீஎஸ்எஸ்) அவர்கள் விமானப் படைத் தளபதி எயார் மார்சல் சுமங்கள டயஸ் அவர்களை கொழும்பில் உள்ள விமனாப் படைத் தலைமையகத்தில் திங்கட் கிழமையன்று (23) சந்தித்தார். இராணுவத் தலைமையகத்திற்கான விஜயத்தின் பின்னர் விமானப் படைத் தளபதியவர்களை சந்திக்கும் நோக்கில் விமானப் படைத் தலைமையகத்திற்கு பயணித்தார். இதன் போது விமானப் படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

விமானப் படைத் தலைமையகத்தில் இவ்விரு தரப்பினருக்கிடையிலான சந்திப்பின் போது பரஸ்பர முக்கியத்துவங்கள் மற்றும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன் போது இவ்விரு தரப்பினரிடையே நினைவுச் சின்னங்களும் கையளிக்கப்பட்டதுடன் அதன் பின்னர் அதிதிகள் புத்தகத்தில் தமது கருத்துக்களை சாம்பிய இராணுவ தளபதியவர்கள் குறிப்பிட்டார்.

மேலும் சாம்பிய நாட்டு இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் டபிள்யூ எம் சிகாஸ்வே மற்றும் அவரது ஆறு இராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழுவினருடன் நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொடுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.. Sports brands | Nike