24th February 2020 22:50:01 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 54ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 542ஆவது படைப் பிரிவின் கீழ் உள்ள 15ஆவது (தொண்டர்) கெமுனு ஹேவா படையிரால், மன்னார் மடு வீதியின் குஞ்சிகுளம் வீதி மரிப்பு சோதனையின் போது சுமார் 12கிலோ கஞ்சாவை கொண்டு சென்ற மஹேந்திர பொலெரோ கெப் வண்டியானது படையினரால் கைப்பற்றப்பட்டது.
மன்னார் முதல் தம்புள்ளை வரை பயணித்த இக் கெப் வண்டியினை சந்தேகத்தின் அடிப்படையில் தேடிய படையினர் வாகனத்தின் உள்ளே மறைத்து வைக்கப்பட்ட கஞ்சாவை கைப்பற்றினர்.
சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்ட இக் கெப் வாகனத்தில் இருந்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மடு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த வீதி மரிப்பு சோதனை நடவடிக்கையானது அதிமேதகு ஜனாதிபதயவர்களின் போதைபொருள் பாவனையினை இல்லாதொழிக்கும் திட்டத்தின் கீழ் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers | Nike Running