Header

Sri Lanka Army

Defender of the Nation

26th February 2020 11:50:48 Hours

சாம்பிய இராணுவத் தளபதியவர்கள் இலங்கை இராணுவத் தளபதியின் ஏற்பாட்டிற்கு பாராட்டு தெரிவிப்பு

சாம்பிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் டபிள்யூ.எம் சிகாஸ்வே பிஎஸ்சி டீஐவி (டீஎஸ்எஸ்) எம்ஏ (டீஎஸ்எஸ்) அவர்களுக்கான விருந்துபசார நிகழ்வானது, திங்கட் கிழமையன்று (24) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி கிங்ஸ்பேரி ஹோட்டலில் இடம்பெற்றது.

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் விமானப் படைத் தளபதி எயார் மாஷல் சுமங்கல டயஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு வருகையை மேற்கொண்ட பிரதம அதிதி லெப்டினன் ஜெனரல் டபிள்யூ.எம் சிகாஸ்வே மற்றும் அவரது குழுவினரை, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவா வணிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சன் இணைந்து வரவேற்றனர். அதன் பின்னர் அவர்கள் பிரதான விருந்துபசார அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்நிகழ்வில், இலங்கையர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலாச்சார நடனம் மற்றும் இசை நிகழ்வுகள் இடம்பெற்றன. அங்கு தங்களின் கலைத் திறமையை வெளிப்படுத்திய இராணுவ நடன குழுவினருடன் பிரதம அதிதியவர்கள் கலந்துரையாடியதுடன் தன்னுடைய பாராட்டினையும் அவர்களுக்கு தெரிவித்தார்.

இராணுவத் தளபதியின் ஏற்பாட்டினை பாராட்டும் முகமாக சாம்பிய இராணுவத் தளபதியவர்களினால் ஆற்றிய உத்தியோகபூர்வமான உரையும் இடம்பெற்றது.

இரவு விருந்தபசார இறுதி நிகழ்வில் இரு தளபதிகளுக்குமிடையில் ஞாபகச் சின்னங்கள் கையளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். spy offers | Sneakers Nike Shoes