Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2020 18:50:40 Hours

ஶ்ரீநாத் நகரில் தேவிபாலிகா மாணவர்கள் மற்றும் படையினர் இணைந்து மர நடுகை முன்னெடுப்பு

54ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுபாஷன வெலிகல அவர்களின் கண்காணிப்பின் கீழ், கொழும்பு தேவிபாலிகா கல்லூரி மாணவர்கள் மற்றும் 542ஆவது பாதுகாப்பு படையினர் ஒன்றிணைந்து மன்னார் பிரதேசத்தில் உள்ள ஶ்ரீநாத் நகரில் மர நடுகைத் திட்டத்தை வௌ்ளிக் கிழமை(14) மேற்கொண்டனர்.

இந் நிகழ்வானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களின் ஆசிகளுடன் மேற்கொள்ளப்பட்டதுடன் 44 மாணவர்கள், 02 ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் இராணுவத்தினருடன் ஒன்றிணைந்து 55 மரக்கன்றுகளை நட்டனர்.

இந் நிகழ்வில், 542ஆவது பாதுகாப்புபடைத் தலைமையகத்தின் பல உயர் அதிகாரிகள் ,ஏனைய படையினர்கள் மற்றும் 8ஆவது விஜயபாகு காலாட் படையின் படையினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். Nike shoes | Nike