24th February 2020 23:50:01 Hours
நல்லிணக்க அடிப்படையில் இலங்கைகான விஜயத்தை மேற் கொண்ட சாம்பிய இராணுவத் தளபதி, இன்று காலை (24) இராணுவத் தலைமையகத்திற்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயமானது இலங்கை இராணுவம் மற்றும் சாம்பிய இராணுவம் ஆகியவற்றிற்கிடையே பல ஆண்டுகளாக காணப்படுகின்ற சிறந்த புரிந்துனர்வைக் எடுத்துக்காட்டுகின்றது. சாம்பிய இராணுவத்தினருக்கான பயிற்சிகளை இலங்கையில் மேற்கொள்வதற்காக வழிவகுத்த அரசு மற்றும் இராணுவத்திற்கு வருகை தந்த சாம்பிய இராணுவத் தளபதியவர்கள் தனது நன்றிகளைத் தெரிவித்தார் என பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று காலை (24) ஊடகங்களுற்கு கருத்து தெரிவித்தார்.
சாம்பிய இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் தரத்தில் உள்ள மகளிர் அதிகாரியவர்கள் திருகோணமலையில் உள்ள இராணுவ வினியோக பயிற்சி பாடசாலையில் பயிற்சிகளைப் பெற்றுவருவதோடு, சாம்பிய நாட்டு இராணுவ பயிலுனர் அதிகாரிகள் தங்களது பயிற்சிகளை இலங்கை இராணுவ அகடமி மற்றும் பல பிரதேசங்களில் மேற்கொள்கின்றனர். அதற்கமைய சாம்பிய இராணுவமானது எமது அகடமியின் பயிற்சிகள் தொடர்பாக திருப்தியடைந்துள்ளதுடன் மேலும் சாம்பிய பாதுகாப்பு சேவைக் கட்டளை மற்றும் பதவிநிலைக் கல்லூரி போன்றவற்றிற்கு இராணுவ பயிற்றுவிப்பாளர்களை அனுப்புமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதிமேதகு ஜனாதிபதியவர்களின் ஆலோசனையுடன் இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இராணுவ பயிற்றுவிப்பாளர்களை அனுப்புவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்வர். சாம்பிய இராணுவத் தளபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததோடு, அவ்வாறான தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கான முக்கியத்துவத்தைப் பற்றியும் குறிப்பிட்டார்.
சாம்பிய இராணுவத் தளபதியவர்கள் தங்களுடைய இராணுவத்தினரை இலங்கை இராணுவ பாடநெறிகள்,பரீட்சைகள்,பயிற்சிகள் மற்றும் தேவையான பாட அலகுகளில் கலந்து கொள்வதற்கு அனுப்பவுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் தங்களுடைய இராணுவ செயற்பாடுகளின் மேம்பாடு தொடர்பாக பரிமாறிக்கொள்ள தங்களுடைய இராணுவத்தினருக்கு அழைப்புவிடுத்துள்ளனர் என ஊடகங்களிற்கு பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மேலும் தெரிவித்தார். jordan Sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092