25th February 2020 02:50:01 Hours
“ “இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட சாம்பிய இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் சிகாஸ்வே அவர்கள், தமது கருத்தைதெரிவிக்கையில், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர், இராணுவத் தளபதி மற்றும் இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சமீபகால பயங்கரவாத தாக்குதல்களிலும் போரிலும் தங்கள் உயிரைத் தியாகம் செய்த எங்கள் சகோதர சகோதரிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் இச் சிறந்த தேசத்தை பார்வையிடுவதற்கான அழைப்பை விடுத்த இராணுவத் தளபதியான லெப்டின் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.
““நாங்கள் மிக தொலைவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளோம். 2ஆம் உலக யுத்த காலத்தில் எமது சாம்பிய படையினர் இலங்கை நாட்டின் வழியாக பர்மா (மியன்மார்) பயணித்துள்ளனர்.மேலும் இராணுவத் தளபதியவர்களின் ஆசிகளுடன் எமது படையினரை பயிற்றுவிப்பதற்கான சந்தர்பம் கிடைத்துள்ளது. அவர்கள் பர்மாவிற்கு செல்ல முன்னர் கிட்டத் தட்ட 6மாத கால பயிற்சிகளை இலங்கையில் பெற்றுள்ளனர். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சில சம்பவங்கள். அவர்கள் குறித்த யுத்தத்திற்கு செல்ல முன்னர் மறுபடியும் அதேவழியாகவே சென்றனர். ஆதலால்,நாம் 2ஆம் உலக போர் சூழ்நிலையில் இடம்பெற்ற வரலாற்று நிகழ்வுகளை காணமுடிகின்றது. தற்போது இராணுவத் தளபதியவர்களின் அழைப்பையேற்று நான் இங்கு கலந்துகொண்டுள்ளேன். ஏனெனில் இராணுவத்தைப் பொறுத்த வகையில் நீங்கள் சிறந்து விளங்குகின்றீர்கள்.
“‘’அந்த வகையில், சிறந்த உபசரிப்பை வழங்கியமைக்காக நான் ஜெனரல் சவேந்திர அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் தியத்தலாவை இராணுவ எக்கடமியின் செயற்பாடுகளை நாம் பார்வையிட்டோம். நாங்கள் புரிந்துணர்வு விடயங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இது நடைமுறைக்கு வருமையானால் எங்களுடைய அதிகாரிகள் மற்றும் ஏனைய விடயங்களை பரிமாற்றிக்கொள்ள இலகுவாக அமையும்.
“மேலும் எமக்கான அழைப்பைவிடுத்த இராணுவத் தளபதியவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, சாம்பிய நாட்டிற்கான அழைப்பையும் நாம் அவர்களுக்கு விடுத்துள்ளோம். எங்களுடைய அழைப்பை அவர் ஏற்றுக்கொள்வார் என எனக்கு தெரியும்.உங்களுக்கு இறை ஆசிகள் உரித்தாகட்டும் என அவர் தனது செவ்வியில் மேலும் தெரிவித்தார். (காணொளியை கீழே காணலாம். ) Running sports | NIKE HOMME