Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2020 04:50:01 Hours

வாகன போக்குவரத்து நெருக்கடிகளை குறைப்பதற்காக பொலிஸாருக்கு உதவ இராணுவ பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானம்

(ஊடக வெளியீடு)

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் கொழும்பு நகரத்தினுள் வாகன நெருக்கடிகளை குறைப்பதற்காக இலங்கை பொலிஸாருக்கு உதவும் நோக்கத்துடன் இராணுவ பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் முப்படைகளின் முனைஞரும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய இன்று (24) ஆம் திகதி காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

நகர வீதிகளில் ஏற்படும் பாரிய நெரிசல்களை குறைக்கும் நோக்கத்துடன் இராணுவ பொலிஸார் வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 6.00 – 10.00 வரையும் மாலை 4.00 – 7.00 மணி வரை நகர போக்குவரத்துக்கு கடமைகளுக்காக பொலிஸாருடன் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இலங்கை இராணுவ பொலிஸாருக்குரிய நடமாடும் கார் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் கண்காணிப்பு கடமைகள் நிமித்தம் வீதிகளில் ஈடுபடுத்தபடுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (நிறைவு) Running sports | Nike Air Max 270