23rd February 2020 16:31:00 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும 14, 141 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சிங்கப் படையணியின் பூரன பங்களிப்புடன் கம்பஹா மாவட்டத்திலுள்ள போதல மீரிகம பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயானது அனைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
இம் மாதம் (23) ஆம் திகதி மதியம் 12.30 மணியளவில் மிரிகம பகுதியில் உள்ள அகேஷியா தோட்டத்திலுள்ள போத்தலே எனும் பிரதேசத்தில் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தானது இராணுவத் துருப்புக்களின் பங்களிப்புடன் அனைக்கப்பட்டன.
இந்த பணிகள் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எஸ் ஆரியசிங்க அவர்களது பரிந்துரைப்பின் கீழ் 25 ஆவது சிங்கப் படையணியினால் மேற்கொள்ளப்பட்டன. affiliate link trace | Nike