24th February 2020 18:50:01 Hours
லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இலங்கை இராணுவமானது, தனது சிறந்த பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயினால் பெரிதும் பாதிப்படைகின்ற அனுராதபுரத்தில் எக்கோ சிகிச்சை முறைகளைக் கொண்ட வைத்தியசாலை அமைக்கும் பணிக்கு வழங்க வுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது இன்று காலை (22) மிஹிந்தலை அம்பதலாக பிரதேசத்தில், பாரிய அளவிலான மதத் தலைவர்கள், அமைச்சர்கள், பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானி மற்றும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, அரச அதிகாரிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ,மேலும் இத் திட்டத்திற்கான நன்கொடையாளரான அவுஸ்திரேலியாவில் உள்ள சாந்தி அமைப்பின் தலைவரான வைத்தியர் சுஹர்ஷ கணதிகொட மற்றும் பல அங்கத்தர்வகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இப் பணிக்கான நன்கொடையாக சுமார் 120 மில்லியன் ருபா பணத் தொகையை சாந்தி அமைப்பானது வழங்கியதுடன் 2017ஆம் ஆண்டு இலங்கை சுகாதார அமைச்சு மற்றும் சாந்தி அமைப்புக்கு இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் அம்பந்தனகம எனும் பிரதேசத்தில் காணப்படும் சுமார் 3.1ஏக்கர் நிலப்பரப்பளளவான நிலமானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 40 நோயாளிகள் பராமரிக்க முடியூம்.
இந் நிகழ்வில் சூழல் மற்றும் வன பாதுகாப்பு கௌரவ அமைச்சர் எஸ் எம் சந்திரசேன (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்கள் பாதுகாப்பு சுகாதார அமைச்சருக்கு பதிலாக கலந்து கொண்டதோடு பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவுஸ்த்திரேலிய சாந்தி அமைப்பின் தலைவரான வைத்தியர் சுஹர்ஷ கணதிகொட உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன் தேசிய கீதம் மற்றும் உயிர் நீத்த படையினர்கள் அத்துடன் புற்றுநோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றினால் பாதிப்படைந்து மரணித்த நோயாளிகள் போன்றோரிற்கான இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வினைத் தொடர்ந்து மஹா சங்கத்தினரின் தலைமையில் செத் பிரித் வழிபாடுகளுடன் டிட்மபெற்றன.
லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் விரிவுரையினைத் அதனைத் தொடர்ந்து அனுசான நிகழ்வூ சுவர்ணமாலி தூபத்தின் தேரர் கலாநிதி பல்லேகம ஹேமரத்ன தேரர் மிஹிந்தலை ரஜ மஹா விகாரையின் தலைமைக் குரு வலஹாஹங்குணவௌ தம்மரத்ன தேரர் போன்றோரால் நடாத்தப்பட்டது.
இதன் போது நன்றியுரையானது வைத்தியர் சுஹர்ஷ கணதிகொட அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இந் நிகழ்வில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பௌத்த தேரர்கள் 21ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிர கடற்படை மற்றும் விமானப் படை அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சாந்தி அமைப்பின் அங்கத்தர்வர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். Nike air jordan Sneakers | adidas