18th February 2020 16:01:48 Hours
மே மாதம் 2009 ஆம் ஆண்டு எல்டிடிஈ பயங்கரவாத மனிதாபிமான நடவடிக்கைகளின் போது காயமுற்றுள்ள விஷேட தேவையுடைய விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த இராணுவ வீரனுக்கு ‘செவன ஹோல்டிங் தனியார் நிறுவனத்தின் அனுசரனையில் பலாங்கொடையில் புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு இம் மாதம் (14) ஆம் திகதி கையளிக்கப்பட்டன.
14 ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் ஆர்.எம்.பீ ரத்னாயக அவர்கள் வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின் போது முல்லைத்தீவு பிரதேசத்தில் காயமுற்று விஷேட தேவையுடைய படை வீரர்களாக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இவருக்கு 14 ஆவது படைப் பிரிவு மற்றும் 14 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பூரன ஒத்துழைப்புடன் வீடு நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ‘செவன ஹோல்டிங் தனியார் நிறுவனத்தின் தலைவர் திரு சுராஜ் சஞ்ஜீவ சில்வா அவர்களினால் இந்த புதிய வீடு ரிபன்கள் வெட்டி திறந்து வைத்து இந்த பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
மேலும் இச்சந்தர்ப்பத்தில் 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எஸ் ஆரியசிங்க , விஜயபாகு காலாட் படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் பி.எம்.ஆர்.எச்.எஸ்.கே ஹேரத், புணர்வாழ்வு பணியகத்தின் பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் யூ.பி.ஆர் வீரகோன், 14 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி ஈ.எம்.எம்.எஸ்.கே ஏகநாயக , அதிகாரிகள் படையினர்கள் இணைந்திருந்தனர். jordan Sneakers | Air Jordan Release Dates Calendar